Friday, August 19, 2011

சராசரி இந்திய பிரஜை - 1

நான் ஒரு சராசரி இந்திய பிரஜை. சுத்தி என்ன நடந்தாலும் கவலை படாம, நான் உண்டு என் வேலை உண்டு-னு இருக்கற நூறு கோடி பேர்ல நானும் ஒருத்தன். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தா பாராட்டிட்டு facebook-ல ஷேர் பண்ணிட்டு வேற எவனாவது போஸ்ட் பண்ணிருக்கற வீடியோ-வ பாக்க போய்டுவேன். அப்புறம் ஏதாவது ஊழல எதிர்த்து யாராவது உண்ணாவிரதம், ஊர்வலம், மாநாடு போட்டாங்கன்னா போகணும்னு ரத்தம் துடிக்கும்  ஆனா கரெக்டா அந்த நேரத்துல அத விட முக்கியமான வேலை வந்துடும் அத பாக்க போய்டுவேன். அதுக்காக நாட்டு மேல அக்கறை இல்லன்னு லாம் இல்லங்க. நெறையா இருக்கு. 
இந்த நாடு அமெரிக்கா இங்கிலாந்த விட பெருசா வரணும், நாம அந்த ஊருக்கு போக ஆச படர மாதிரி நம்ம நாட்டுக்கு வர மத்த நாட்டுக்காரன் எல்லாம் துடிக்கனும், நம்ம நாட்டு பேர சொன்னாலே உலக சபை ல ஒரு மரியாத இருக்கணும்; இந்த ஆசை எல்லாம் எனக்கும் இருக்கு. யாராவது இந்தியா பத்தி தப்பா பேசினா அசிங்கமா திட்டி தீத்துடுவேன்.  இந்தியா இந்தியா-னு பெருமையா சொல்லிக்கறோம் ஆனா ஒரு நாளாவது நாம ஒழுங்கா நடந்துக்கரோமா??  லிஸ்ட் போட்டா கணக்குல அடங்காது - green சிக்னல் 3 sec தான் பாக்கி இருக்குன்னா அவசர அவசரமா போய் கிராஸ் பண்ணுவோம்; ஆனா red signal 5 sec இருக்கும் போதே வண்டிய மூவ் பண்ணிடுவோம், கோட்டுல நிக்க மாட்டோம், ராங் சைடு ல தைரியமா overtake பண்ணுவோம், ரோட்டுல problem-னா உடனே எறங்கி மத்த டிராபிக் அ பிளாக் பண்ணி சண்ட போடுவோம், அர செகண்ட் கூட பொறுமை இல்லாம ஹாரன் அடிப்போம், எப்பவாது மாட்டிகிட்டா கண்டிப்பா டிராபிக் போலீஸ்க்கு லஞ்சம் மட்டும் தான் குடுப்போம். வெறுமன ரோட்டல travel பண்ணறதுல இவ்வளவு தப்பு பண்ணற நாம எந்த மூஞ்சிய வெச்சுக்கிட்டு நாட்ட ஆளரவண நல்லவனா இருக்க சொல்லறோம்?? "அவங்க நல்லவங்களா இருந்தா நாங்க ஒழுங்கா இருப்போம்" அப்படின்னு சொல்லுவோம் most times. ரூல்ஸ் போட்டாதான் அறிவு வருமா??  ம***படிச்ச நாமதான் இவ்வளவையும் பண்ணறது. ஒருத்தன திருத்தினா இந்த ஊர திருத்தலாம். அந்த ஒருத்தன தேட வேண்டாம். நமக்குள்ள இருக்கான். நாம திருந்துவோம். ஒவ்வொரு தப்பா திருத்துவோம். 


தொடரும்...

Monday, March 8, 2010

என்ன பண்ணிட்டு இருந்தேன் இவ்ளோ நாளா

என்ன பண்ணிட்டு இருந்தேன் இவ்ளோ நாளா.. உண்மைய சொல்ல போனா பெருசா ஒரு வெங்காயமும் இல்ல. வேலைய விட்டுட்டு Work-from-Home னு ஒரு சீன்-அ போட்டுட்டு வெட்டியா பொழுத போக்கிட்டு இருக்கேன். சின்னதா ஒரு நாலஞ்சு client புடிச்சு வெச்சுருக்கோம். அவன் ஏதாது கேப்பான், நமக்கு அத பத்தி ஒன்னுமே தெர்லன்னா கூட, என்னம்மோ .நெட் அ கண்டுபிடிச்சதே நாந்தான்- னு அவன நம்ப வெச்சுட்டு ப்ராஜெக்ட்-அ வாங்கிட வேண்டியது. அப்றமா deadline-ku முந்தின நாள் நைட் தான் கோடு போடவே ஆரம்பிப்பேன். அது எப்படியும் நைட் முடிக்க முடியாது. நடுல orkut, gtalk லாம் இருந்தா எங்க இருந்து code எழுதறது. அப்றமா நைட், இல்ல இல்ல காலைல ஒரு நாலு அஞ்சு மணிக்கு போல படுக்க போனா எழுந்துக்க பன்னிரண்டு மணி ஆய்டும். அப்புறம் அப்டியே பொறுமையா எழுந்து பல்ல மட்டும் தேச்சுட்டு சாப்ட்டுட்டு டிவி பாத்துட்டு மறுபடி ஒரு நாலு மணிக்கு கோடு எழுத ஆரம்பிப்பேன். அதுக்குள்ள client ku விடிஞ்சிடுமா; விடிஞ்சதும் மொதல்ல நமக்கு தான் மெயில் அனுப்புவான். பாசக்கார பயபுள்ள. "Any updates?" அப்டிம்பான். அவன்கிட்ட சொல்லவா முடியும்? இல்ல தம்பி வேற வேலைய இருந்தேன், உன் ப்ராஜெக்ட்-அ பாக்க நேரம் இல்ல னு? "Its going very good. A last minute bug has surfaced. I'll send you the updates before EOD" னு மம்மி அ கண்ட MLA மாதிரி பம்மிட்டு ஒரு மெயில் அனுப்புவேன். எந்த EOD னு சொல்ல மாட்டோம்ல. EDT, GMT, IST nu ஏதாது ஒன்னு வர்றதுக்குள்ள முட்டி முனகி ஒரு வழிய அவனுக்கு அனுப்பினா அதுக்குள்ள மறுபடி அஞ்சு ஆறு மணி ஆய்டும். மறுபடி படுத்து பன்னிரண்டு மணிக்கு எழுந்து மறுபடி நாலு மணிக்கு ஆரம்பிச்சு.... The Legend Continues..

இப்படிதாங்க போய்ட்ருக்கு வாழ்க்க... But there's a change that has to come. பிள்ளையார் சுழி போட்ட்ருக்கேன். Work out aagum. ஆனதும் அடுத்த blog post. அது வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் வசந்த். (அட- ச்ச. வீட்ல ஓவரா சன் மியூசிக் பாத இப்படிதான்) என்ன்ன கொடும்ம சார் இது.

Monday, October 12, 2009

அலுவலகத்தில் ஒரு நாள் - கடைசி நாள்

போன போஸ்ட்லயே சொன்னேன்ல வேலைய விட்டுட்டேன் னு. போன வெள்ளிகிழமை தான் கடைசி நாள். அன்னைக்கு பொழுது வழக்கம் போல பொறுமையா பத்தரைக்கு விடிஞ்சது. மெதுவா எழுந்து பிரஷ் பண்ணிட்டே டிவி போட்டேன். அது ஒரு பழக்கம் - சும்மா கிராஸ் பண்ணும் போது டிவி அ பாத்து எல்லா சேனல்லையும் என்ன போடறான்னு ஒரு தடவ பாத்துட்டு அப்டியே போறது ஒரு தனி சுகம். அன்னைக்கும் அப்டிதான் டிவி போட்டேன். எடுத்த உடனே சன் மியூசிக் ஓடிட்டு இருந்தது..... சிம்பு பாட்டு... ஐய்யயோ மாத்து மாத்து.. காலைல நான் வரல இந்த வெளையாட்டுக்கு. 


டிவி ஆப் பண்ணிட்டு நிதானமா கெளம்பிட்டு இருந்தா மணி 11:30. பன்னிரண்டு மணிக்கு Exit Interview வர்ஷா உடன். வர்ஷா - ஆபீஸ் ல இருக்கற மிக திறமையான ஒரு HR. வேகமா கெளம்பி ஆபீஸ் போய் என் டெஸ்க்ல இருந்து பேப்பர் எல்லாம் எடுத்து விக்ரம் (என்னோட டீம் லீட்) ப்ராஜெக்ட் சம்பந்த பட்ட பேப்பர் லாம் சைன் ஆப் வாங்கிட்டு  வேகமா இன்னொரு பில்டிங் ல இருக்கற வர்ஷா-ட போனேன். வாங்கி பாத்துட்டு "என்ன தம்பி கையெழுத்து வாங்க சொல்லி குடுத்தா அப்டியே கொண்டு வந்திருக்க. போய் எல்லா டிபார்ட்மென்ட் லையும் sign off வாங்கிட்டு வா" னு சொல்லி திரும்ப குடுத்துட்டாங்க. "நான் மெயில் ல எல்லாத்தையும் தெளிவா சொல்லிருந்தனே" அப்டின்னு சொன்னாங்க. "கெளம்பறோம் னு எல்லா மெயில் ஓட சேத்து அதையும் டெலிட் பண்ணிட்டேன். ஈஈஈஈஈஈஈ......" இது நான். வேறென்ன பண்ணறது. அசடு வழிஞ்சிட்டே கெளம்பினேன். 


அதுக்குள்ள பசிக்க ஆரம்பிச்சுடுச்சு. சரின்னு நான் விக்ரம் செந்தில் மூணு பேரும் "கர் கா கானா" (அது kar kaa kaana இல்ல gar kaa kaana. Unlimited rotti and rice) போய் ரொட்டியும் ரைஸ் உம் சாப்டுட்டு வந்தோம். அப்றமா சரவணன்-ட பைக் வாங்கிட்டு மூனாவதா இன்னொரு பில்டிங் ல இருக்கற அக்கௌண்ட்ஸ் டீம் ல போய் கையெழுத்து வாங்கிட்டு அப்டியே அங்க இருக்கற நம்ம பய புள்ளைகளுக்கு எல்லாம் டாட்டா காமிச்சிட்டு அங்கருந்து கெளம்பி அடுத்த பில்டிங் போனேன். அங்க அட்மின்-ல கையெழுத்து, அப்புறம் கொஞ்சம் காத்திருந்து IT-ல ஒரு கையெழுத்து வாங்கிட்டு ஒரு வழியா வர்ஷா-ட போனேன். கொஞ்சம் formailities , signs லாம் முடிச்சிட்டு பத்து நிமிஷம் இன்டெர்வியு. அதையும் முடிச்சிட்டு அந்த பில்டிங் ல எல்லாருக்கும் டாட்டா சொல்லிட்டு என் பில்டிங் வரும் போது மணி அஞ்சு.


விக்ரம் வெவரமா சொன்னதால Accounts டீம்-அ பாக்க போறதுக்கு முன்னாடியே எல்லாருக்கும் அனுப்ப வேண்டிய மெயில் எல்லாம் அனுப்பிட்டேன். ஆக வந்து என் சிஸ்டம் ல கொஞ்ச நேரம் உக்காந்துட்டு கெளம்பலாம்னு சொன்னா திடு திப்புன்னு வா அப்டின்னு கான்பரண்ஸ் ரூம் கூட்டிட்டு போய்ட்டாங்க. மொத்த floor உம். எங்க ப்ராஜெக்ட் அப்புறம் அதே கிளையன்டோட  இன்னொரு ப்ராஜெக்ட். மொத்தம் ஒரு இருபது பேர். எல்லாரும் வந்து வாழ்த்து சொல்லி, ஒரு ஷர்ட் கிப்ட் பண்ணினாங்க. எல்லாரும் கையெழுத்து போட்ட ஒரு கார்டும். மனசுக்கு ரொம்ப நிறைவா, சந்தோஷமா இருந்துச்சு. பிரியறோம்-கர சோகமும். 


அப்புறம் என் டீம் ல எல்லாரும் (நான், விக்ரம், ஷிராஸ், சரவணன், ராகேஷ்) கீழ போய் நாயர் கடைல ஒரு டீ சாப்ட்டு கடைசியா ஒரு டாட்டா சொல்லி கெளம்பினேன். விக்ரமும் ஷிராசும் வீடு வர வந்தாங்க(வீடு ஆபீஸ் இருக்கற அதே தெரு) வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு வாழ்த்து சொல்லிட்டு போனாங்க. மிக சிறந்த மனிதர்கள். குடுத்து வெச்சிருக்கணும் இவங்க கூட லாம் வேல பாக்க. அப்றமா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு உடை மாத்திட்டு முகம் கழுவிட்டு வந்து டிவி போட்டா...


சிம்பு. ...


மாத்து மாத்து மாத்து....




Wednesday, October 7, 2009

என் முதல் பதிவு

நேத்து ஏதோ blog படிச்சிட்டு இருந்தேன். தோனிச்சு நாம கூட எழுதலாமேன்னு. So சும்மா  trying. Actually பாத்துட்டு இருக்கற  வேலைய  விட்டுட்டேன் . (அது  ஒரு  பெரிய  கத. அத பத்தி அப்புறம் நெறையா பாக்கலாம்) So இனிமே வெட்டிதானே. போர் அடிச்சா எழுதலாம். 
இனிமே நான் ஒரு Independent Journalist (இதுக்கும் இன்னொரு கத இருக்கு. கொடுமடா சாமி) 
இனிமே வர போற பதிவு எல்லாத்துக்கும் இங்கயே hint குடுத்துடலாம் போலருக்கு. இப்படிதான் எல்லாரும் blog எழுதுவாங்களா... நல்லாருக்கே 
வீட்ல அம்மா பாக்கிற சீரியல் ல இப்படிதான் "என்னது கோபால் அப்படியா சொன்னான்?" அப்படின்னு ஒரு அதிர்ச்சி ஓட யாராது கேப்பாங்க. மறு நாள் பாத்தா கோபால் வந்து "நான் நேத்து கடைக்கு போய் அரிசி வாங்கினேன்" னு ஏதாவது மொக்கையா இருக்கும். கவலையே படாதீங்க. சத்யமா என் Blog உம் அப்படி தான் இருக்கும். அட சும்மா போர் அடிச்சா மொக்க போட்டுக்க வேண்டியதுதான. Why So Serious? எனக்கு அமைதி பிடிக்கும், தாளம் போட வைக்கற இசை பிடிக்கும், தனிமை பிடிக்கும், கூட்டமா கும்மாளம் போட பிடிக்கும், இளைய ராஜா பிடிக்கும், ஏ ஆர் ரஹ்மான் பிடிக்கும், கமல் பிடிக்கும், ரஜினி பிடிக்கும், .நெட் பிடிக்கும், ஜாவா பிடிக்கும், சுறு சுறு னு வேல செய்ய பிடிக்கும், ஒன்னுமே செய்யாம தூங்க பிடிக்கும். இப்படி பிடிச்சது நெறையா இருக்கு. பிடிக்காதது இன்னும் இருக்கு. எல்லார மாதிரி தான் நானும். Got some philosophies for myself which sometimes differentiate me from others. I'm some one who can't take life as it comes. I want life my way. என்னடா திடீர்னு இங்கிலீஷ் ல சீன் போடறான்னு நெனைக்காதீங்க. மொழி ஒரு கருவி. என் மனசுல இருக்கறத எப்படி உங்களுக்கு என்னால ஈசி ஆ சொல்ல முடியும்னு பாக்கணும். அவ்ளோதான் மொழி. உங்களுக்கு புரிஞ்சிடுச்சா, அவ்ளோதான். மேட்டர் ஓவர். அது தமிழ் இங்கிலீஷ் ஹிந்தி பிரெஞ்சு எதுவா இருந்தாலும் தப்பில்ல. ஆனா மேட்டர் என்ன நா எனக்கு தமிழும் இங்கிலீஷ் உம் தான் தெரியும். ஹி ஹி நாங்கெல்லாம் ஹிந்தி அ தார் பூசி அழிச்ச பரம்பர ல. அதென்னமோ ஹிந்தி சின்ன வயசுல இருந்தே மண்டை ல ஏரல. சித்தி வீட்ல இருந்து தான் சின்ன வயசுல படிச்சேன். (காலேஜ் உம்) சித்தி இன்னொரு அம்மா :) சித்திக்கு ஹிந்தி நல்ல தெரியும். அதென்னமோ ஏழெட்டு எக்ஸாம் எழுதிருக்காங்கலாம். நல்லா முருங்க காயால அடிச்சு சொல்லி குடுத்தாங்க. ம்ம்ஹும்ம்ம் நம்ம மண்டைல ஏறவே மாட்டேன்னு ஹிந்தி அடம் புடிச்சிடுச்சு. இப்போ டீம் ல எப்பவாது யாராவது ஹிந்தி பேசினா அச்சா அச்சா னு நானும் கூட சேந்து தும்மிடுவேன். (இதெல்லாம் ஒரு பொழப்பா...!! கேக்குது கேக்குது)
வேறென்ன என்ன பத்தி சொல்லிக்க பெருசா ஒன்னும் இல்ல னு லாம் இல்ல. நெறையா இருக்கு சொல்ல. அண்ணனுக்கு இப்போ டைம் இல்ல. சோ நெக்ஸ்டு மீட் பண்ணுவோம். 


வி வில் மீட்
வில் மீட்
மீட்


சொல்லலயே எனக்கு விஜயகாந்த் னா ரொம்ப பிடிக்கும். அவரோட டயலாக் டெலிவரி காகவே நான் லாம் படம் பாப்பேன். "லெட்ஸ் ஸ்டார்ட் த மிசன்" உங்களால முடியுமா??